காதலின் பிரிவு

காதலின் பிரிவு

காதலிக்காமல் யாருமே இருந்து விட முடியாது. ஆனாலபேட்டை விசுவாமித்திர்ருக்கே காதல வர வைச்சவங்க நாங்க மட்டும் என்ன விதிவிலக்கா?? So காதலிச்சவங்க எல்லாருக்கும் பிரிவு என்ற ஒரு நிலை வந்திருக்கும். சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்ததரமானதாகவும் இருந்திருக்கும். நம் பழைய இலக்கியங்களில் இந்த பிரிவை மிக அழகாக கூறுவார்கள். அதுவும் பண்டய காலத்தில் ஐந்து வகையான நிலங்கள் உண்டு. இந்த ஐந்து வகையான நிலத்திற்கும் ஐந்து வகையான ஒழுக்கம் உண்டு. குறிப்பாக பாலை நிலத்திற்கு உண்டான ஒழுக்கம் தான் பிரிதல். "சந்தன தென்றலில" பாட்டில் காதலியை பிரிந்த காதலன் தன்னை காதல் செய்யும் படி பாடுவதாக இருக்கும். இந்த முழுப்பாட்டையும் பாலைவன பின்னனியில் பாட்டை படமாக்கி இருப்பார்கள். அது போல தான் ஜோதா அக்பர் படத்தில் வரும் "மனமோஹனா" பாட்டும்
 ஒரு வித பிரிவைக் காட்டும் பாடல் தான். ஆனால் பிரிவு தலைவனைக்குறித்தல்ல. கட்டாய திருமணத்திற்கு உடன்பட்டு தலைவி திருமணம் புரிகிறாள். இருந்தும் அந்த வேதனையிலிருந்தும் , தன் குடும்ப பிரிவிலும் துன்புற்று இருக்கிறாள். இந்த பிரிவிலிருந்து தன்னை மீட்க கிருஷ்ண பரமாத்மாவாகிய கண்ணனை துதிப்பது போலும் கிருஷ்ணனையே தன் காதலனாக பாவித்து இந்த பாட்டு இருக்கிறது. தலைவி தன் பிரிவை முன்னிட்டு தனக்கு இதிலிருந்து ஒரு வழி கிடைக்காதா?? என எண்ணி பாடுகிறார்.

கார்முகில் வண்ணா வாராயோ
கோதையின் குரலைக் கேளாயோ

என் சோகங்கள் தீர்ப்பாயா-என்
தாகங்கள் தீர்ப்பாயா


என வேண்டி தன் கஷ்டத்தை தலைவி முறையிடுகிறாள்.


குறிப்பாக இந்த பாட்டின் இசையை ஒவ்வொரு முறை கேட்கும் போதும் மனதிற்கு ஒரு வித நெருடலைத் தரும் பாடலாக எனக்கு இருக்கிறது. அதுமட்டுமல்லலாது இந்த பாட்டின் real feel ஆன பிரிவை தற்காலிகமாக உணர வைக்கும் இசையை ரஹ்மான் தந்திருப்பார். இந்த பாட்டிற்கு பலம் இசை மட்டுமல்ல இந்த பாட்டின் வரிகளும் தான். நா.முத்துக்குமார் தன்னுடைய பணியை செவ்வனவே செய்துள்ளார் அது போல சாதனாசர்க்கமின் குரல் அடுத்த ஒரு பக்க பலமான ஒன்று. எனக்கு தெரிந்து சுவர்ணலதாவின் இடைவெளியை இவர் ஓர் அளவிற்கு நிரப்பியுள்ளார் என்றே எனக்கு மீண்டும் புரிகிறது.  பாடல் தொடங்கி
1.09 -2.15 இடைப்பட்ட நேரத்திலே பாட்டின் orchestra தொடங்குகிறது. ஒரு 15 வயலின் மற்றும் 3 செலோ சேர்த்து வாசித்திருப்பார்கள் போல!!  இந்த பாட்டிற்கு அந்த string section ம் புல்லாங்குழல் இசையுமே போதும் என எப்படி தான் ARR யோசிக்கிறாரோ? தெரியல. ஒரு strong orchestration ஐ கொண்ட பாட்டாக தான் இதை நான் கருதுகிறேன்.

வாழ்க்கை எனும் கடலில் தினமும்
அலையின் மேலே அலை அடிக்க
இதயம் எனும் படகு அதில்
தடுமாறி மோதிடுதே
தூயவனே துடுப்புகள் போட்டு
கரையினில் ஏற்றி விடுவாயா
நடுக்கடலில் விடுவாயா

என் சோகங்கள் தீராய் நீ

ஈழ தமிழனின் கடல்பயணம்

தமிழர்கள் இல்லாத நாடே இல்லை. தமிழர்க்கு என்று ஒரு நாடே இல்லை. இந்த வாசகத்தை நான் பல முறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அதாங்க சில அரசியல் கூட்டங்களிலும் கேட்டிருக்கிறேன். இந்த தமிழருக்கு தனி நாடு வேண்டும் என்ற அதங்கத்தில் பிறந்தது தமிழீழ விடுதலைப்புலிகள். நடந்தது 3 தசாப்த யுத்தம்!!! இதெல்லாம் நான் ஏன் சொல்றன்?? உங்களுக்கு தெரிந்தது தானே?? என்று பார்க்கிறீங்களா??? இப்படி அந்த யுத்த காலத்தில் ஆண்கள் எல்லோரும் சண்டைக்கு செல்ல மிஞ்சி இருந்தவர்கள் உயிருடன் இருக்க அவர்களை கப்பலில் ஏற்றி பாதுகாப்பாக இருக்க வழி செய்தனர். அப்படி 1986 ம் ஆண்டு இலங்கையிலிருந்து கனடாவின் வன்கூவர் பகுதிக்கு வந்த மக்களின் கதை தான் சொல்ல போகிறேன்.ஒவ்வொரு நாட்டுக்கும் 12 மைல் தான் கடல் எல்லை. அதற்கு மேற்பட்டது சர்வதேச கடல் எல்லை. இது தான் ஒவ்வொரு நாட்டினதும் சட்டம். அப்படி தான் கனடாவின் கடல் பாதுகாப்பு சட்டமும். கனடாவிற்கு முதல் முறை ஒரு யூதக் கப்பல் வந்தது. அதை சர்வதேச கடல் எல்லையில் வைத்து திருப்பி அனுப்பிவிட்டனர். பின்னர் இந்தியாவிலிருந்து சீக்கிய மக்கள் குழு கனடாவிற்கு வந்தது. அம் முயற்சியும் தோல்வியில் முடிவடைந்திருந்தது. இப்படி கனடாவின் கடல் பாதுகாப்பு சட்டங்களை அறியாமல் 1986 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கையிலிருந்து 155 பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்தனர். நாங்கெல்லாம் பேச்சுக்கு சொல்லலாம் கடலில் கப்பல் மூலம் கனடாவிற்கு போயினம் எண்டு சொல்லலாம். அப்படி கப்பலில் கனடாவிற்கு செல்ல தனி மனதைரியமும் மனதில் உறுதியும் வேண்டும். சுமார் 3-4 மாதங்கள் நீங்கள் கடலில் பயணம் செய்ய வேண்டும், அதுமட்டுமல்ல அவ்வளவு பேருக்குமான சாப்பாடு ,குடிக்க தண்ணீர்,இயற்கை உபாதைகள்,நோய் மற்றும் மருத்துவம் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அஅதுமட்டுமல்ல அவர்கள் பயணிக்கும் கப்பல் இல்லை இல்லை அது ஒரு வித படகு என்றே சொல்ல வேண்டும் அதற்கு எரிபொருள் மற்றும் ஒருவித பிரச்சனை இன்றி கனடா வர வேண்டும். ஐயோ !! நினைத்து பார்கவே பயங்கரமாக இருக்கிறதல்லவா!! இப்படி இலங்கையிலிருந்து புறப்பட்ட 2 வது கப்பல் தான் SUNSEA கப்பல். நான் மேற்கூறிய இரண்டும் பெயரளவில் தான் கப்பல். உண்மையில் அது கனடா போன்ற நாடுகளில் மீன் பிடிக்க கூட அது போன்ற கப்பலை பயன்படுத்த மாட்டார்கள். என்று அவர்களை காப்பாற்றிய உள்ளூர் captain கூறிய வார்தைகள் ஞாபகம் வருகிறது. ஆம் இந்த SUNSEA மூலம் வந்தவர்கள் 492 பேர்கள் அதில் ஒருவர் கப்பலிலே இறக்க அப்படியே கடலில் வீசி விட்டு பயணத்தை தொடந்தவர்கள். வேறு வழியில்லை மருத்துவ வசதி கூட இல்லாமல் இருந்த நேரத்தில் அவர்களால் என்ன தான் செய்ய முடியும் ? இக் கட்டுரை எழுதும் போது என் மனதில் எழுந்த கேள்வி இது. இவர்கள் என்ன தைரியத்தில் இப்படி கப்பலில் கனடாவிற்கு இப்படி மக்கள் தொகையாக வெளிக்கிட்டார்கள???ஆம் ஆராய்ந்து பார்த்த போது தான் எனக்கு கிடைத்தது. இவர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்ட காலப்பகுதி இலங கையில் சண்டை உக்கிரமான நடந்த காலமாகும். ஊரிலிருந்து சாவதை விட தப்பிக்க ஒரு வழி. முயற்சித்து தான் பார்ப்போமே!!!எப்படியும் சாகத்தானே போகிறோம் என்ற மனநிலையில் தான் இருந்திருப்பார்கள் இவர்களின் பயணம் படங்களில் வரும் adventure type மாதிரி. இவர்களின் மனநிலை மற்றும் உடல்நிலை தான் மற்றய சவால். இப்படியான பயணங்கள் இயல்பாகவே சுற்றி ஆட்கள் இருந்தாலும் தனிமையை தந்துவிடும் ஏன்னா நேரிடையான மக்கள் தொடர்பு இல்லை மற்றும் எப்போது தரை அல்லது தீவு ,சக மனிதர்களை பார்போம் என்ற உணர்வு எப்பொழுதுமே இருந்து கொண்டே இருக்கும். அடுத்த கேள்வி இவர்களின் வாழ்க்கை முறை பற்றியது. கனடா சென்ற இவர்களின் பிணக்குகளைத் தீர்த்து வைப்பது யார்??? அதற்கு முதல் இவர்கள் கனடா வந்த வித்த்தை பார்ப்போம். Atlantic சமுத்திரத்தில் பல நாள் பயணித்து கனடாவின் கிழக்கு பகுதியான Territory British Columbia க்குள் வருகின்றனர் முதல் கப்பல் அகதிகள் குழுவான 1986 ம் ஆண்டு குழு. இந்த நேரம் கனடாவின் சர்வதேச கடல் எல்லைக்கு அண்மையாக மீன் பிடித்துக் கொண்டிருந்த Dus Galton மற்றும் அவர்களின் குழுவினர் இவர்களை காண்கின்றனர. அப்போது கப்பலில் இருந்தவர்கள் இது கனடாவா??? இது மொன்ரியலா??? என அரைகுறை ஆங்கிலத்தில் கேட்க அவர்களும் ஆமாம் என்று சொல்லி அவர்கள் அவ்வளவு பேரையும் தமது 22 life boats மற்றும் தமது மீன் பிடிக்கும் பெரிய கப்பலில் ஏற்றினர். கப்பலின் எடை அதிகரித்து. ஏன் என்றால் பிடித்த மீன்களும் இருந்தமையால் கப்டன் சொல்கிறார் பிடித்த மீன்களை கடலில் வீசி விட்டு அஅவர்களை ஏற்றிக்கொண்டு விரைவாக கரைக்கு திரும்பினார்கள். கப்டன் உடனடியாக கரையோர எல்லை காவல் படைக்கு தகவல் அனுப்பினார். இவர்களின் அதிஷ்டம் அவர்கள் 155 பேரையும் கனடா அகதிகளாக ஏற்றுப் கொண்டது. ஆனால் இரண்டாவது அகதி கப்பலை அவர்கள் இப்படி எளிதாக உள்ளே விட வில்லை அந்த கப்பலில் வந்த 492 பேரையும் பயங்கரவாதி என குற்றம் சாட்டி சிறையில் அடைத்தது. பின்னர் விசாரணைகளின் பின்னர் அவர்கள் பகுதி அளவாக விடுவிக்கப்பட்டனர். 2010 ல் வந்த இக் குழுவில் சிலர் இன்னும் சிறையிலேயே இருக்கின்றனர். இவ்வாறு இவர்கள் பயணிக்கத் தொடங்கியதிலிருந்து கனடா வந்தடைந்த பிறகும் இவர்கள் சந்தித்த அவலங்கள் ஏராளம். இவர்கள் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் நல்ல முடிவாக இவர்கள் இப்போது நல்ல நிலையில் இருக்கின்றனர்.இவர்களுக்கு கனடாவில் ஏற்பட்ட அநீதிகளுக்கு தற்போதய பிரதமர் Justin Trudeau பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். அண்மையில் அவர்கள் 30 ஆண்டு நிறைவு விழாவை தம்மை காப்பாற்றிய கப்டன் மற்றும் அவர்கள் சகாக்களுடன் நன்றி தெரிவித்தார்கள். தற்போது இவர்கள் அனைவரும் கனடாவின் தற்போதய சிறந்த பிரஜைகளாக உள்ளனர். தமிழனின் தன்னம்பிக்கைதான் எப்போதும் வெற்றிக்கு காரணம்
இந்த சாதியம் எப்போது உடைபடும்??? ஈழத்து சிறுகதை

இந்த சாதியம் எப்போது உடைபடும்??? ஈழத்து சிறுகதை

உங்கட காணில ஏதாவது வேலையிருந்தா சொல்லுங்கோவன்?மனிசன் வேலையில்லாமல் ரண்டு நாளா வீட்டிலதான் இருக்கிறார்”.படிக்கட்டில் இருந்தபடி கதிரையில் இருந்த பாலரை கெஞ்சிக்கொண்டிருந்தது கனகு. "சரி கனகு இருந்தா சொல்லமாட்டனா? சரி சரி போய்ட்டு நாளைக்குவாவெணை" கனகு கந்தல்துணிகளை சுருட்டிக்கட்டிக்கொண்டு புறப்பட ஆயத்தமானது.கனகிற்கு நான்கு பிள்ளைகள் கடைசி மகன் ஸ்கொலர்சிப் படித்துக்கொண்டிருக்கின்றான்.மூத்தவளுக்கு கல்யாணமாகிவிட்டது.கனகின் கணவர் கூலிவேலை செய்பவர். நிவாரண அரிசியின் துணையுடனும் கனகு வேலைக்கு செல்லுமிடங்களில் கொடுக்கும் பரிசுகளுடனும்தான் கனகின் குடும்பம் வாழ்கின்றது. பாலர் எழும்பி சென்றதும் பாலரின் மூத்தமகன் கூப்பிட்டான் "அக்கா.....இண்டைக்கு வைரவருக்கு பொங்கினது புக்கை வடையெல்லாம் இருக்கு பொறுன்கோவன் கொண்டுவாறன்". "எடுத்துவையெணை நான் பின்னால வாறன்" என்று கூறிவிட்டு கனகு விறுவிறுவென்று பாலரின் வீட்டைச்சுற்றி குசினிக்கு வந்துசேர்ந்தாள். சாதிப்பிரச்சனை கனகிற்கு வீட்டுக்குள் செல்லவோ வீட்டினுள்ளே இருக்கும் தளபாடங்களை பயன்படுத்தவோ அனுமதியில்லை. வீட்டின் உள்ளே குறையுயிரில் படுத்திருக்கும் பாலரின் தாயைகவனிக்கமட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தாள் கனகு. இஞ்ச வா கனகு....இந்தா... என்று பேரன்புடன் பாலரின் மனைவி கனகிற்கு பிரசாதம்கொடுத்தார்.கனகு வாங்கிக்கொண்டு விடைபெற்றது.கனகு பாலர் வீட்டில் நான்கு ஐந்து வருடங்களாக வேலைசெய்கின்றது.பாலரின் தாய்க்கு உடம்பு முடியாமல் படுத்திருக்கும்போது அவரைகவனிக்க பாலரால் குறைந்த செலவில் கனகு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாள்.கனகை நம்பி ஊரில் கடன் கொடுக்க யாருமில்லை.கஷ்ரமான நேரங்களில் அவளது பிரார்த்தனைக்கு ஓரளவாவது செவிசாய்க்கும் ஓரேயிடம் பாலரின்வீடுதான்.இதனால் பாலர்குடும்பத்தில் கனகிற்கு தனிபாசம்,ரியாதை இருந்தது.இதனால்தான் மகளின் கல்யாணவீட்டிற்கு பாலர் அழைத்தாலும் வரமாட்டார் என்று தெரிந்து மாப்பிள்ளையையும் மகளையும் பாலரின் வீட்டிற்கு அழைத்துவந்திருந்தாள்.வீட்டின் படலையுடன் அவர்களை அனுப்பிவிடாது வீட்டுவாசல்வரை அழைத்து காசுகொடுத்து தனது பெரும்தன்மையை பறைசாற்றியிருந்தார் பாலர்.ஏன் கனகு சுருட்டிக்கொண்டு சென்ற கந்தல்துணிகள்கூட பாலர்குடும்பத்து பழையதுணிகள்தான். அன்று கனது தன் கடைசிமகனை பாலர்வீட்டிற்கு அழைத்துவந்திருந்தாள். "என்ர கடைசிமகன்...கொலசிப்பு படிக்கிறான்".. ஆ..அப்பிடியே...எப்புடி நல்லா படிக்கிறானோ? பாலர் இழுத்தார். "ம்...ஓம் நல்லா இங்கிலீசும் கதைப்பான்" வெத்திலைக்காவியாகிவிட்ட தனது 23 பற்களையும் வெளியே காட்டினாள் கனகு. பாலருக்கு சற்று ஆச்சரியமாகத்தான் இருந்தது. கனகு பாலரிடம் விடைபெற்று செல்ல ஆயத்தமானாள். அடியே கனகு... பாலரின் மனைவி அழைத்தார். "இந்தா இதைக்கொண்டுபோ உனக்குத்தான்" என்று மூன்று அங்கர் பால்மாபெட்டிகளைக்கொடுத்தார் பாலரின் மனைவி. கனகு அதிர்ச்சியுடன் "எணை ஒருபெட்டியே முன்னூறு நானூறுரூபாக்கிட்ட வருமேயெணை" "பறுவாயில்லை கனகு எல்லாம் உனக்குத்தானே" கனகு மிகுந்த மகிழ்ச்சியுடன் அவற்றை வாங்கிக்கொண்டு படலைக்கு வந்தாள்.அங்கே நின்ற கடைசி மகனை பெருமிதத்துடன் பார்க்க என்னம்மா இது? "அங்கர் ட்டியெடா மூண்டுமே ஆயிரத்துக்கு மேலவரும் எனக்கெண்டபடியால்தாண்டா தந்தவை" அம்மா எரிச்சலுடன் கத்தினான் அவன் என்ன? நீ பேப்பரும் வாசிக்கிறேல்ல அதால உனக்கு ஒரு இழவும் தெரியுதுமில்லை ஏண்டா? அங்கரில டி.சி.டி எண்ட சாமானிருக்காம் குடிச்சாவருத்தம்வருமாமெணை கான்சரெல்லாம் வருமாம் அரசாங்கம் கூட தடைசெய்திருக்கு.கடையில இருக்கிறத அவனவன் விக்கேலாம அல்லாடுறானாம். முதல் நாள் பாடசாலைக்கூட்டத்தில் அதிபர் பேசியவற்றின் சாராம்சத்தை கொட்டித்தீர்த்தான் அவன். கனகிற்கு யாரோ பிடரியில் அறைந்ததுபோல் இருந்தது.தன் கைகளில் ஒன்று பிடுங்கப்பட்ட உணர்வு.கண்ணீரைக்கட்டுப்படுத்தவில்லை கண்ணீர் கொப்பளித்தது. மகனைப்பார்த்து மெதுவாக சிரித்தாள்.மகனின் கையைப்பற்றிக்கொண்டு அவ்விடத்தைவிட்டு நீங்கினாள். அங்கர்ப்பெட்டி படலையில் அநாதையாகக்கிடந்தது. (கனகு : ஈழத்தமிழர் மகன் : எமது அடுத்த தலைமுறை எம்மை பரிதாபமான இனமாக பார்பதை ஒருபோதும் நாம் விரும்பவில்லை ... நாங்கள் வீரத்தின் அடையாளமாகவே இருக்க விரும்பிகிறோம் ... )
இசைப்புயல் , mozzard of madras , Oscar வாங்கிய தமிழன் AR RAHMAN

இசைப்புயல் , mozzard of madras , Oscar வாங்கிய தமிழன் AR RAHMAN


 இசையின் புதிய பரிணாம்ம் தொடங்கி 24 வருடம். அடுத்த வருடம் 25 ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாட காத்திருக்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆம் அவர் தான் இசைப்புயல் , mozzard of madras , Oscar வாங்கிய தமிழன் AR RAHMAN. 1992 ம் ஆண்டு இவரின் உத்தியோகபூர்வ இசைப்பயணம் மணிரத்னம் அவர்களால் ரோஜா படத்தில் ஆரம்பமானது. இந்த கால கட்டம் ARR க்கு மிகவும் ஒரு நெருக்கடியான காலகட்டம் ஆகும். ஏனெனில் இந்த் காலகட்டத்திலேயே இளையராஜாவின் hit album ஆன தளபதி வந்திருந்தது. அதன் பின் இளையராஜாவுக்கும் மணிரத்தினத்துக்கும் ஏற்பட்ட கருத்து மோதலால் மணிரத்தினத்திற்கு புதிய மற்றும் திறமையான இசைஅமைப்பாளர் தேவைப்பட்டது. அப்போது தான் ARR ஐப் பற்றி கேள்விப்பட்டார். அந்த நேரம் ARR அவர்கள் விளம்பரங்களிற்கு இசை அமைத்துக்கொண்டிருந்த நேரம். இப்படியான சந்தர்ப்பத்தில் தான் அவர் ரோஜா படத்திற்கு இசை அமைக்க வந்தார். இப் பேச்சு வைரலாக பரவ பலரும் மணி சாரையும் ,ARR ஐயம் கேலி பண்ணிணார்கள். இளையராஜாவுக்கு நிகராக ஒரு சின்ன பெடியனா?? என்றும் ARR யார் எனவும் அலச தொடங்கினார்கள் மக்கள். அப்போது தான் தெரிந்தது மறைந்த இசை அமைப்பாளர் சேகரின் மகனும் இளையராஜாவின் band ல் keyboard கலைஞனாக இருப்பது தெரிய வந்தது. அதுமட்டுமின்றி தனது 6வது வயதில் keyboard வாசிக்க தொடங்கியவன் என்றும் electronically instruments ஐப் பற்றி அறிவு நிறைந்தவர் என்றும் கதைக்காமல் தொடங்கினார்கள். என்ன தான் இருந்தாலும் இசைக்கு இசை ஞானி தான் என்று வேர்ஊன்றிய காலத்தில் இவர் எப்படி இசை தரப்போகிறார் ? என்றும் எப்படி trend set பண்ணபோகிறார் ? அல்லது பழையபடி இருப்பதை வைத்து சில மெட்டுக்கள் மாற்றி தரப்போகிறாரா? என்றும் படம் அவர் முன்னர் கதைக்க தொடங்கி விட்டார்கள். சரி படத்திற்கு இசை அமைக்க தொடங்கி முதல் நாள் recording !!!!எல்லா கலைஞருக்கும் சொல்லிவிடப்பட்டிருந்தது. But அன்று விசேடமாக recording என்று ஒருவருமாவார் வரவில்லை. சிறிது மனக்கலக்கத்துடன் தன் தாயாரிடம் அதைப் பற்றி சொல்ல தாயார் தேற்றி இருக்கும் வளங்களை வைத்து தொடங்கு என்று தாயார் சொல்ல தன்னம்பிக்கையுடன் தொடங்கினார். புது பாடகர்கள, புது மெட்டு , electrical instruments , புது இசை கோர்வையுடன் "சின்ன சின்ன ஆசை "பாட்டு மின்மினியின் குரலில் பதுவுசெய்யப்பட்டது. இடையில் interlude ல் வரும் "ஏலேலோ ஏலே ஏலேலோ"அவரின் கிரில் வந்தது. மற்றும் காதல் ரோஜாவே, புது வெள் ளை மழை பாடல்கள் எல்லாம் தனி இடங்களை பிடித்தது. இதுவரை தபேலா,வயலின் , flute போன்ற இசையை மட்டும் கேட்ட நமக்கு புதிய தரத்தில் bass உடன் கூடிய மற்றும் சிறிய இசையையும் நம் காதுகளுக்கு இனிமையாகவும் தெளிவாகவும் கேட்க முடிந்தது. வழமைகளை உடைத்தார். புது புரட்சி செய்தார். இதன் விளைவு முதல் படத்திலே தேசிய விருது. இவ்வளவத்திற்கும் அவர் வாங்கிய சம்பளம் வெறும் 25000ரூபாய் மற்றும் அவர் பெயர் கூட coverல போட வில்லை. தன்ம்பிக்கை , முயற்சி, பக்தி , அமைதி இன்னும் எவ்வளவோ சொல்லலாம். எத்தனை விருதுகள் , புகழ் அடைந்தாலும் அவற்றை பெரிதாக எடுக்க மாட்டார். Real hero. Inspiration of most youths. தொடரட்டும் உம் இணைப்பணி.
இங்கே யார் ஜோக்கர்? - ‘ஜோக்கர்’ விமர்சனம்

இங்கே யார் ஜோக்கர்? - ‘ஜோக்கர்’ விமர்சனம்



 
டத்தில்... பதவியைத் தக்க வைக்க தகிடுதத்தம் செய்யும் முதல்வர் இல்லை, இடைத் தேர்தலில் ஜெயிக்க எதிராளியை கொலை செய்யும் ஆளுங்கட்சி உறுப்பினர் இல்லை, மது-மாது என எப்போதும் உல்லாசிக்கும் சட்டமன்ற உறுப்பினர் இல்லை. ஆனால், காட்சிக்கு காட்சி, வசனத்துக்கு வசனம் சுளீர் அரசியல் பேசுகிறான் இந்த ‘ஜோக்கர்’!
’பவருக்கும், பவுசுக்கும் அடிமையாகி, தீயதைக் கொண்டாடி, நல்லதை மறந்து வாழ்ற சமுதாயத்துலதான் நாம வாழ்றோம். ஆனா, அதைத் தட்டியும் கேட்கமாட்டோம், தட்டிக் கேட்குறவங்கள ஜோக்கர்னும் சொல்லுவோம்’ என்ற நிதர்சனத்தை எதார்த்தமாக முகத்தில் அறைந்து சொல்லியிருக்கிறான் ’ஜோக்கர்’.
சசிபெருமாள், ‘டிராஃபிக்’ ராமசாமி, ‘மதுரை’ நந்தினி போன்றவர்களின் போராட்டங்களை வெறும் செய்திகளாகக் கடக்கும் சமூகத்துக்கு... மக்களாட்சிக்கு யார் பொறுப்பு என்பதை அழுந்தத்திருத்தமாகச் சொல்கிறார் இயக்குநர் ராஜு முருகன். ’குக்கூ’வில் காதலும் காதல் நிமித்தமுமாக மெழுகுவர்த்தி ஒளி காட்டியவர், ‘ஜோக்கரில்’ பிடித்திருப்பது அரசியல் தீப்பந்தம்!
வீட்டில் ஒரு கக்கூஸ் கட்டினால் காதலியை கை பிடிக்கலாம். ஆனால், அது கூட இயலாத ‘மன்னர் மன்னனாக’ சோமசுந்தரம். அரச பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடினாலும், ‘பொட்டி கேஸ் பொன்னூஞ்சல்’ என்று கிண்டலுக்கு உள்ளாகும் ராமசாமி. கழிப்பறை இருக்கும் வீட்டுக்கு திருமணமாகி செல்ல வேண்டும் என்பதை பெருங்கனவாகக் கொண்டிருக்கும் பெண்ணாக ரம்யா பாண்டியன். கணவனை மது அரக்கனுக்குப் பறி கொடுத்துவிட்டு, அரசாங்கத்துக்கு எதிரான குரலுக்கு ஒலிபெருக்கியாக இருக்கும் ’இசை’யாக காயத்ரி கிருஷ்ணா. இந்த நால்வர் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் தமிழகத்தின் அவல நிலவரங்களை பொளேரென முகத்தில் அடித்துச் சொல்கிறான் ‘ஜோக்கர்’!
மத்திய அரசாங்கம் அறிவிக்கும் இலவச கழிப்பறைத் திட்டத்தில் கழிப்பறை கட்ட விண்ணப்பிக்கிறார் சோமசுந்தரம். ஆனால், கழிப்பறை ஊழலில் இவருக்கு மிஞ்சுவது பீங்கான் கோப்பை மட்டுமே. அரைகுறையாக எழுப்பப்பட்ட கழிப்பறையால் அவர் வாழ்வே கேள்விக்குறியாகிறது. இதனால் மனதளவில் பாதிக்கப்படும் சோமசுந்தரம், தன்னை ’இந்தியாவின் ஜனாதிபதி’யாக நியமித்துக் கொண்டு, ஊரில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்துகிறார். கூடவே தன் மனைவிக்காக ஒரு மனு போட்டு, நீதிமன்றங்களில் அது தள்ளுபடி செய்யப்பட உச்சநீதிமன்றம் வரை அதைக் கொண்டு செல்கிறார். அது என்ன மனு, அதன் விளைவு என்ன, சோமசுந்தரத்தின் போராட்டங்கள் என்ன தாக்கத்தை உண்டாக்குகின்றன போன்ற தொடர் சம்பவங்களை மனதில் ஆதங்கமும் ஆவேசமுமாகப் பதியச் செய்கிறது படம்!
சினிமா எனும் அதிகவனம் ஈர்க்கும் பொதுதளத்தில், அந்தப் பொது தளத்தின் மனசாட்சியையே சாட்டையால் விளாசியிருக்கிறது கதையின் கரு!
கழிப்பறையில் பிருஷ்டத்தை கழுவியபடியே படத்தின் நாயகன் அறிமுகமாவது முதல் ‘இதுக்கு பஜார் லாட்ஜ்ல பிராத்தல் பண்ணலாம்’ என கொதிகொதிக்கும் க்ளைமாக்ஸ் வசனம் வரை... படத்தில் எங்கும் ’so called' சினிமா சாயல் இல்லை. ‘அபத்தங்களைக் கொண்டாடி’ பழகிய சினிமாவில் இது புது பாட்டை. துணிச்சலுக்கு வாழ்த்துகள் ராஜு!
’உன் கைலதான் கவர்மெண்ட் இருக்குல்ல... பேசாம அந்த நாய்க்கு காய் அடிச்சுவிட்ரு’, ‘நகைக்கடைக்காரன் புரட்சி பண்ற நாட்ல, ஜனாதிபதி புரட்சி பண்ணக் கூடாதா?’, ‘ஜனாதிபதி வீட்டு கரன்ட் பில்லு எவ்ளோனு கேட்டாக் கூட சொல்லணும்’, ‘சகாயம் பண்ணுங்கனு சொல்லலை... சகயாம் மாதிரி பண்ணுங்க’னுதான் சொல்றோம்!’, ‘இந்த நாட்ல வாழ்றதுதான் கஷ்டம்னு பார்த்தா... இப்போ பேள்றதையும் கஷ்டமாக்கிட்டாங்களே..!’, ’குண்டு வைக்கிறவன்லாம் விட்டுருங்க, உண்டகட்டி வாங்கி திண்ணுட்டு கோயில்ல தூங்குறவன பிடிங்க’, ’உழைக்கிறவன் வண்டியதான போலீஸ் புடிச்சு ஸ்டேஷன்ல வெச்சுக்கும்? எந்த ஸ்டேஷன்லயாவது ஆடி காரோ, பி.எம்.டபிள்யூவோ துருப்பிடிச்சு நின்னுட்டிருக்கா?’  - குடியானவனின் வீட்டு கழிப்பறைகளிலிருந்து கோடிகளைக் கொள்ளையடித்துக் கொண்டு ‘கக்கூஸ் கட்டுன காசு நாறாது’ என்று தத்துவம் பேசும் அரசியல் - அதிகார மையங்களை சகட்டுமேனிக்கு சவட்டியெடுக்கின்றன வசனங்கள்.
அதே சமயம் சாமான்யனின் மனசாட்சியையும் உலுக்குகின்றன வசனங்கள். ‘சூப்பர் சிங்கர்ல நம்ம புள்ள கலந்துக்கணும்... அதைப் பார்த்து நாம அழுவணும்... அதை டி.வி.ல காட்டணும்!’, ‘ஆமா.. அவர் அப்பா மார் சளிக்காக குடிக்கிறாரு, என் புருசன் நான் மார்ல அடிச்சிக்கணும்னு குடிக்கிறான்’, ‘இப்போலாம் ஹீரோவைவிட வில்லனைத்தானே இந்த சனங்களுக்குப் பிடிக்குது’, ‘உங்களுக்காகப் போராடுற எங்களைப் பார்த்தா பைத்தியக்காரன்னு தோணினா... அது எங்க தப்பில்ல!’ - பொறுப்பை உதாசினப்படுத்தும், நல்லது/கெட்டது தெரியாத- தெரிந்துகொள்ள விரும்பாத- உள்ளங்களை உலுக்கும் வார்த்தைகள்.   
’மக்கள் ஜனாதிபதி’யாகவே வாழ்ந்திருக்கிறார் சோமசுந்தரம். எளியவனைப் பிரதிபலிக்கும்போது ஒரு நடிப்பும், அந்தக் கோட் அணிந்து ஜனாதிபதியானதும் தலையை நிமிர்த்தத் துவங்கி, அதற்கென ஒரு நடிப்பும் என்று மிளிர்கிறார். ‘ஒரு கண்ணு காந்தி, இன்னொரு பக்கம் பகத்சிங்கை வச்சிருக்கேன். எனக்கு கோவம் வந்துச்சி பகத்சிங்க அவுத்துவிட்டுருவேன் பாத்துக்க’, ‘பாப்பிரெட்டிப்பட்டி பவன்ல இருந்து வந்த பெட்டிஷன் என்ன ஆச்சு’ என்று ஆவேசம் காட்டும்போதெல்லாம்... இந்நாட்டின் மன்னனாகவே மாறிவிடுகிறார். அதே சமயம் காதலி முதன்முதலில் வீட்டுக்குள் வரும்போது காட்டும் அந்த குழைவும், நெளிவும்... சிறப்பு!
கோவணப்போராட்டம், வாயிலடித்துக்கொள்ளும் போராட்டம், குளோபல் வார்மிங் போராட்டம், ரிவர்ஸ் போராட்டம், காறித்துப்பும் போராட்டம் என்று விதவிதமாகப் போராட்டங்களில் ஈடுபடுகிறார் சோமசுந்தரம். அதற்காக நீதிமன்ற வாசலில் பெட்டிகேஸ் போட்டு, நீதிக்காக காத்துகிடக்கும் பொன்னூஞ்சல்,  ஒவ்வொரு போராட்டத்தையும் ஃபேஸ்புக்கில் பகிர்வது என்று போராட்டத்தை அப்டேட்டாக எடுத்துச்செல்லும் இசை... அவரவர்களின் பின்புலம் மற்றும் நடிப்பு சபாஷ்!
‘உங்க மேல அரசியல்வாதிகளுக்கு ஏன் கோவம்’ என்று பத்திரிகையாளர்கள் கேட்க, சோமசுந்தரம் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்வதெல்லாம்... கசக்கும் உண்மை!
‘மண்டைக்குள்ள கலவரம், யுத்தகாலம் ஆரம்பிச்சிட்டுது’ என்று வசனம் பேசும் பவா செல்லத்துரை, சிறிதுநேரம் வந்தாலும் நடிப்பில் நச். அவருக்கும் சோமசுந்தரத்துக்குமான உரையாடல்களே படத்தின் போக்கைத் தீர்மானிக்கின்றன.
படத்தின் ராஜூமுருகனுக்கு பக்கபலமாக க்ளாப்ஸ் அள்ளுகிறது செழியனின் கேமரா. பறவைப் பார்வையில் சோமசுந்தரம் கிராமத்துக்குள் உலாவருவதைக் காண்பிப்பதிலும், சோமசுந்தரம் வீட்டின் ஒவ்வொரு சதுர அடியைக் காண்பித்ததிலும் கனகச்சிதம். செல்லம்மா பாடலில் சோகம் கடத்துகிறது ஷான் ரோல்டனின் இசை. திரைக்கதையின் வேகம் குறையுமிடங்களில், வசனங்கள் அந்த அலுப்பை சரிசெய்கிறது.
‘கோணமண்டை புடிக்கல’ என்று தன்னை ரிஜெக்ட் செய்யும் ரம்யாவை, சோமசுந்தரத்தின் பிரியம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைக்கும் காட்சிகள்... படத்தின் மென் அத்தியாயங்கள்.
மினரல் வாட்டர் நிறுவனத்தின் பெயர் ‘AMA', 'மதுவால் இறந்தவர் இங்கே... மதுவைத் திறந்தவர் எங்கே’, டெல்லி சாமி, அரை நாள் உண்ணாவிரதத்துக்கு ஏன் ஏ.சி., இயற்கை வளச் சூறையாடல், இஸ்லாம் பிறைக்கும் சிவன் பிறைக்கும் முடிச்சிட்டு ‘முப்பாட்டன்’ என அறைகூவும் ‘ஒறவுகளே’ தலைவர் என நிகழ்கால அநீதிகளை, அபத்தங்களை போகிற இடமெல்லாம் சுட்டி குட்டிக் காட்டுகிறது படம்.
இதுவரை, ’பிழைக்கத் தெரியாதவன்’ என்ற அடைமொழிக்கோ, படத்தின் அச்சு பிச்சு காமெடிகளுக்கோ பயன்பட்டு வந்த ஒரு கதாபாத்திரத்தை, கதை நாயகனாக்கியதிலேயே ‘ஜோக்கர்’ வித்தியாசப்படுகிறான். இதில் 6 பாட்டு, 5 ஃபைட்டு கொடுக்கும் கேளிக்கை கொண்டாட்டங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு இந்த ‘ஜோக்கர்’ மூலம் செட்டு சேராது. அதே சமயம், காட்சி ஊடகமான சினிமாவில் வசனங்களே பலத்த தாக்கத்தை உண்டாக்குகின்றன. மனதைத் தைக்கும், உணர்வுகளை உருக்கும் விஸூவல்கள்... பத்தலையே! படம் முழுக்க இருக்கும் எதிர்மறை தொனியையும் தவிர்த்திருக்கலாம். நமக்குப் பழகிய சினிமாவில் ‘happy end' என்பது க்ளிஷேவாக இருந்தாலும், ஜோக்கர் பேசும் கருவுக்கு அது ஒரு நம்பிக்கை கீற்றாக இருந்திருக்கும்.

Kategori

Kategori